17th July 2025
இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூலை 16 அன்று தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பிங்கர் ஸ்விப்ட் 2025’ ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட புதுமையான தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மேம்பாட்டு தீர்வுகள் மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்பத்தின் பரந்துப்பட்ட பயன்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில், இராணுவத்தின் தற்போதைய தகவல் தொழில்நுட்ப நிலையை வெளிப்படுத்தும் ஒரு கவர்ச்சிகரமான காணொளி காண்பிக்கப்பட்டது. பின்னர், இலங்கை சமிக்ஞைப் படையணி படைத்தளபதியும் தலைமை சமிக்ஞை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் ஜீ.எல்.எஸ்.டபிள்யூ லியனகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சி அவர்கள் வரவேற்பு உரையை நிகழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து, உணவு கேள்வி முகாமைத்துவ அமைப்பு, வருடாந்த ரகசிய அறிக்கை முகாமைத்துவ அமைப்பு மற்றும் பதக்க வழங்கல் தகவல் முகாமைத்துவ அமைப்பு ஆகிய மூன்று தகவல் தொழிநுட்ப பயன்பாடுகள் தகவல் தரும் வீடியோ கிளிப்புகள் இராணுவத் தளபதியினால் வெளியிடப்பட்டன.
பின்னர், 12 வது இலங்கை சமிக்ஞை படையணியினால் சைபர் களத்தில் உள்ள சாத்தியமான அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டும் ஒரு சைபர் பாதுகாப்பு செயல் விளக்கம் நடத்தப்பட்டது.
பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட மென்பொருள் அமைப்புகளின் செயல்பாட்டு பயன்பாட்டை எளிதாக்குவதற்காக, தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தினால் நிறைவு செய்யப்பட்ட திட்ட நிறைவுச் சான்றிதழ்களை இராணுவத் தளபதி இராணுவச் செயலாளர் கிளை, ஆளணி நிர்வாகம் மற்றும் ஆட்சேர்ப்பு பணிப்பகம் மற்றும் வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர்களிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து அமைப்புகளின் வளர்ச்சிக்கு பங்களித்த தொழிநுட்ப நிபுணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முடிவில், தலைமை சமிக்ஞை அதிகாரி இராணுவத் தளபதிக்கு ஒரு சிறப்பு நினைவுப் பரிசை வழங்கினார். தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்.ஜே.கே.டி ஜயவர்தன யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
‘பிங்கர் ஸ்விப்ட் 2025’ நிகழ்ச்சியை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.