இராணுவத்திலிருந்து சிவில் வாழ்வுக்கு வலுவூட்டல் திட்டத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில் இராணுவத் தளபதி

இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கான 'இராணுவத்திலிருந்து சிவில்' வாழ்வுக்கான முன்னேற்பாடு மற்றும் வலுவூட்டல் திட்டத்தின் விருது வழங்கும் விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு போர்வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது.

வருகை தந்தத இராணுவத் தளபதியை, போர்வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூ.ஏ.எஸ்,ஆர். விஜேதாச டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.

இராணுவத் தளபதியுடன், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ மற்றும் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோர் கலந்துகொண்டு, இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினர்.

இராணுவ சேவைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கைக்குத் தயாராக சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஓய்வுக்குப் பின்னர் அதிக அதிகாரிகளின் விருப்பங்களை வெற்றிகரமாகத் தொடர உதவும் வகையில், ஓய்வுக்கு பின்னரான வலுவூட்டல் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.