25th July 2025
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் பிஎம்ஆர்ஜே பண்டார அவர்கள் 34 வருட சிறப்பு மிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் 2025 ஜூலை 24 ம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் பிஎம்ஆர்ஜே பண்டார அவர்கள் 1990 ஜனவரி 25 ம் திகதி இலங்கை இராணுவத்தின் பாடநெறி எண் 12 (தொ) பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1990 ஓகஸ்ட் 05 இரண்டாம் லெப்டினன் நிலையில் விஜயபாகு காலாட் படையணியில் நியமிக்கப்பட்டார்.
அவர் தனது சேவைக் காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு 2024 ஒக்டோபர் 08 ம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 ஜூலை 31 ம் திகதி தனது 57 வயதை அடைந்ததும் தொண்டர் படையணியில் இருந்து ஓய்வு பெறுவார். அவர் தற்போது, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதியாக பதவி வகிக்கின்றார்.
அவர் தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் குழு தளபதி, 2 வது விசேட படையணியின் குழுத் தளபதி மற்றும் போக்குவரத்து அதிகாரி, 2 வது விசேட படையணி ஆதரவு நிறுவனத்தின் ஆதரவுத் தளபதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை அவர் வகித்தார். 2 வது மற்றும் 3 வது விசேட படையணியின் நிர்வாக நிறுவனத்தின் அதிகாரி கட்டளையாகவும் பணியாற்றினார். மேலும் அவர் 21 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 16 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார்.
மேலும், இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையின் பயிற்சி கண்காணிப்பாளர், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், அதே பயிற்சி பாடசாலையின் தளபதியாகவும் பணியாற்றினார். புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணிப்பகத்தின் கீழ் கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றினார். மேலும் அவர் யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு அதிகாரி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தின் பிரிகேடியர் (நிர்வாகம்) மற்றும் பயிற்சி ஆய்வாளர், இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
விசேட படையணி பயிற்சி பாடநெறி, இயந்திர தொழில்நுட்பப் பாடநெறி, அலகு நிர்வாகம் மற்றும் கணக்குப் பாடநெறி, அடிப்படை பராசூட் பாடநெறி, பாதுகாப்பு ஊடகம் மற்றும் தொடர்பு பாடநெறி, சிரேஷ்ட தலைவர் அபிவிருத்தி பாடநெறி, உயர் சிவில் சமநிலை முறைமை பாடநெறி மற்றும் சமநிலை முறை பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு பயிற்சித் பாடநெறிகளை அவர் நிறைவு செய்துள்ளார்.
சர்வதேச வெளிப்பாட்டைப் பொறுத்தவரை, அவர் இந்தியாவில் நடத்தப்பட்ட இளம் அதிகாரிகள் பாடநெறி, கொமாண்டோ பாடநெறி மற்றும் சிரேஷ்ட கட்டளை பாடநெறி ஆகியவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
கல்வி சாதனைகளைப் பொறுத்தவரை, அவர் உயர் தேசிய வணிக முகாமைத்துவம் நிறுவனத்தில் மனிதவள முகாமைத்துவத்தில் மேம்பட்ட தேசிய டிப்ளோமா கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் உறவுகள் மற்றும் மனித வள முகாமைதுவத்தில் முதுகலை டிப்ளோமா, இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா பெற்றுள்ளார். அலிசன் ஒன்லைன் கல்வி தளம் மூலம் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் டிப்ளோமாவையும் முடித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் உறவுகள் மற்றும் மனிதவள மேலாண்மையில் முதுகலை பட்டத்தையும், களனி பல்கலைக்கழகத்தில் புத்த ஆயுர்வேத ஆலோசனையில் முதுகலை டிப்ளோமாவையும், அதே பல்கலைக்கழகத்தில் புத்த ஆயுர்வேத ஆலோசனையில் கலை முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.