20th July 2025
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் ரணவிரு எப்பரல் ஆடை நிறுவனத்தின் முகாமைத்துவ சபையின் தலைவருமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 18 ஆம் திகதி யக்கலை ரணவிரு எப்பரல் தொழிற்சாலைக்கு தனது முதல் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியை ரணவிரு எப்பரல் ஆடைத் தொழிற்சாலையின் தளபதி பிரிகேடியர் எம்.ஏ.டீ.ஜே.டீ குணதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர் தொழிற்சாலையின் வரலாறு, செயற்பாடுகள், உற்பத்தி முறைகள் மற்றும் முகாமைத்துவ அமைப்புகள் குறித்து தளபதி விரிவான விளக்கத்தை வழங்கினார்.
இந்த விஜயத்தின் நினைவாக முகாம் வளாகத்தில் "நெல்லி" மரக்கன்று ஒன்றை பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி நாட்டினார். பின்னர் அவர் உற்பத்திப் பகுதிகளை ஆய்வு செய்து, உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான உத்திகளை வழங்கினார்.
உற்கட்டமைப்பு வசதிகளையும் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மதிப்பாய்வு செய்து, அதன் தரத்தை உடனடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அறிவுறுத்தினார். தொழிற்சாலையை மேம்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும், அதன் இலக்குகளை அடையவும், இலங்கை இராணுவத்திற்கு உயர்தர சீருடைகளை உற்பத்தி செய்யவும் இது உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.