இலங்கை இராணுவத்தினரால் ஊவா மாகாணத்தில் காயமடைந்த படைவீரர்களுக்கான மருத்துவ முகாம்

ரணவிரு சேவா அதிகாரசபையுடன் இணைந்து போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், தியதலாவை இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையில் ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளி இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாமை 2025 ஜூலை 30 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. ஊவா மாகாணத்தில் வசிக்கும் படைவீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் நலின் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். வருகை தந்த அவரை, போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூஏஎஸ்ஆர் விஜேதாச டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்பி கோஹோனா (ஓய்வு) மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர்.

நிகழ்வின் போது, இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் 10 சக்கர நாற்காலிகள், 03 செயற்கை கால்கள், 15 ஊன்றுகோல்கள் மற்றும் நடைபயிற்சிக்கான 06 ஊன்றுகோள் அடையாளமாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளிகள்/மருத்துவ காரணத்தினால் இடைநிறுத்தப்பட்டவர்கள் மற்றும் தற்போது மருத்துவ பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர். மருத்துவ ஆலோசனைகள், செயற்கை உறுப்பு பராமரிப்பு, தோல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், மனநல ஆலோசனை மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல் ஆகியவை இந்த மருத்துவ முகாமில் இடம்பெற்றன.