பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்திற்கு விஜயம்

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 22 ஆம் திகதி முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, பணிப்பகத்தின் அனைத்து தொழில்நுட்ப பிரிவுகளையும் பார்வையிட்டார். குளிர்விப்பான் அறை, தீ பாதுகாப்பு மற்றும் கண்டறிதல் அமைப்பு, லிப்ட் அமைப்பு, உயர்/குறைந்த மின்னழுத்த மின் அறைகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அவற்றின் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பகுதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

தற்போதைய நிர்வாக மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகள் தொடர்பாக பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கலந்துரையாடலில் ஈடுபட்டார், மேலும் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்த பெறுமதியான வழிகாட்டுதலை வழங்கினார்.

மேலும், இந்த முக்கியமான அமைப்புகளை திறம்பட பராமரிப்பதில் பணிப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் அர்ப்பணிப்பின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், தொடர்ச்சியான மேற்பார்வை மற்றும் தடுப்பு பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.