அபிமன்சல 3 நலவிடுதியின் போர் வீரர்களின் நத்தார் கொண்டாட்டம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அபிமன்சல 3 நலவிடுதியில் 2025 டிசம்பர் 23 ஆம் திகதி நத்தார் தினம் கொண்டாடப்பட்டது.

நலவிடுதியில் சிகிச்சை பெற்று வரும் அங்கவீனமுற்ற போர் வீரர்களின் மன உறுதியையும், அவர்களின் அர்ப்பணிப்புள்ள பராமரிப்பாளர்களையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கத்தோலிக்க மத பிரார்த்தனை நடைபெற்றது, அதைத் தொடர்ந்து நத்தார் பரிசுகள் விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.வி. கொடிதுவக்கு என்டியூ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.