31st December 2025
55 வது காலாட் படைப்பிரிவின் 29 வது ஆண்டு நிறைவு விழா 2025 டிசம்பர் 15 அன்று கிளிநொச்சியில் கொண்டாடப்பட்டது.
ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிமித்தம் அனுராதபுர புனித ஸ்ரீ மகா போதியில் கொடி ஆசீர்வாத பூஜையும், கிளிநொச்சி புனித தெரசா தேவாலயம், லும்பினி விஹாரை மற்றும் கந்தசாமி கோவில் ஆகியவற்றில் மத அனுஷ்டானங்களும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வீரமரணம் அடைந்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில், ஆனையிறவு காமினி குலரத்ன நினைவுதூபிக்கு முன்பாக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆண்டு நிறைவு நாளில், 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.ஏ.பி. விஜேகோன் யூஎஸ்பீ என்டிசீ அவர்களுக்கு இராணுவ சம்பிரதாயத்திற்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான மதிய உணவும் வழங்கப்பட்டது.
கொண்டாட்டங்களுடன், கிரிக்கெட், கரப்பந்து மற்றும் பூப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன, மேலும் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.