23rd December 2025
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை முழுவதும் உயிரியியல்மருத்துவ உபகரணங்களை பராமரித்து புதுமைப்படுத்துவதன் மூலம் இராணுவத்தின் செயல்பாட்டு தயார்நிலையை தொடர்ந்து உறுதி செய்கின்றனர்.
உயிரியியல் மருத்துவ சுயாதீன பட்டறையின் படையினர், ரூ. 1.5 மில்லியன் மதிப்புள்ள உதிரி பாகங்களைப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட ரூ. 10 மில்லியன் உயிரியியல் மருத்துவ உபகரணங்களில் பழுதுபார்ப்புகளை மேற்கொண்டனர். விதிவிலக்கான தொழில்முறை திறனை எடுத்துக்காட்டும் படையினரின் தன்னார்வ மற்றும் சுய ஊக்க முயற்சிகள், நாட்டின் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் கணிசமான பொது நிதி சேமிப்பை ஏற்படுத்தியது.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் இலங்கை இராணுவத்திற்கான அவர்களின் சிறந்த சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக பாராட்டுச் சான்றிதழ்களை வழங்குவதன் மூலம் அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்தார்.