இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்த கஜமுத்து கைப்பற்றல்

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்ட அமுலாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கையின் போது, 2025 டிசம்பர் 17 ஆம் திகதி குறிப்பிடத்தக்க கைப்பற்றல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மன்னாரில், பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, தாரபுரம் ஹுசானியா ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரி பரிசோதிக்கப்பட்டது. அதன்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ரூபாய் 239 இலட்சம் பெறுமதியான சிகரெட்கள் (189,000 சிகரெட்டுகள்) மற்றும் பூச்சிக்கொல்லி தொகுதி கைப்பற்றப்பட்டதுடன், பலாவிய பகுதியைச் சேர்ந்த அந்த வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகள் மன்னார் பொலிஸ் நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், அன்றைய தினம் தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மாத்தளை – பலாபத்தவல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகே, ரூபாய் 3 மில்லியன் பெறுமதிக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்த கஜமுத்து இரண்டுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் குருநாகலை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.