அபிமன்சல II னால் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஆன்மீக மற்றும் நல்வாழ்வு நிகழ்ச்சி ஏற்பாடு

போசன் பௌர்ணமி தினத்தை நினைவுகூரும் வகையில், அபிமன்சலவின் தளபதி பிரிகேடியர் ஆர்.ஜீ.எல்.கே. வீரகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கம்புருபிட்டிய அபிமன்சல II நல விடுதியில் சிறப்பு ஆன்மீக மற்றும் நல்வாழ்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. இந்த முயற்சி, உள்நாட்டு போர் வீரர்களின் ஆன்மீக மற்றும் உளவியல் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், அவர்களின் தொடர்ச்சியான மறுவாழ்வு பயணத்தை ஆதரிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சமாக நடமாடும் 'பக்தி கீ' (பக்தி பாடல்கள்) இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இது புனர்வாழ்வு நிலையத்தில் தொடங்கி ஸ்ரீ புஷ்பராம விகாரை, மாகந்துர, கம்புருபிட்டி பிரதான பேருந்து நிலையம் மற்றும் சுற்றியுள்ள பல குறிப்பிடத்தக்க இடங்கள் வழியாகச் சென்றது. நடைபெற்ற இசை நிகழ்ச்சி, பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அமைதி மற்றும் பக்தி உணர்வை ஏற்படுத்தியது.

ஆன்மீக நிகழ்ச்சியை நிறைவு செய்யும் விதமாக, பிரதேசவாசிகளுக்கு மூலிகை பானம் மற்றும் ரொட்டி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்களை ஈர்த்தது.

இந்த நிகழ்வு சமூகத்தினரிடமிருந்தும் பங்கேற்பாளர்களிடமிருந்தும் மிகுந்த பாராட்டைப் பெற்றதுடன், பலர் சமூக நல்லிணக்கத்தில் அதன் நேர்மறையான தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றனர்.