21 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் எம்டபிள்யூஏஆர்சீ விஜேசூரிய ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 21வது காலாட் படைப்பிரிவின் 43 வது தளபதியாக 2025 ஜூன் 13 ம் திகதியன்று 21 வது காலாட் படை தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிய தளபதிக்கு 2வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது. தனது உரையில், படைபிரிவின் எதிர்காலம் தொடர்பான தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.