19th June 2025
விஜயபாகு காலாட் படையணியின் பிரிகேடியர் கே.எல்.ஐ கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2025 ஜூன் 17 அன்று மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.
புதிய தளபதி முகாம் வளாகத்தில் மரக்கன்று நாட்டியதுடன், குழுப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர், அனைத்து நிலையினருக்கும் உரையாற்றிய அவர் பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்கான தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அன்றைய நிகழ்வுகளில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.