59 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் தானம் மற்றும் மருத்துவ முகாம் ஏற்பாடு

59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 59 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வற்றாப்பாளை கண்ணகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு 2025 ஜூன் 09 ஆம் திகதி சீனி சம்பல் பனிஸ் மற்றும் கொத்தமல்லி பானம் என்பவற்றை வழங்கினர்.

மேலும், பொதுமக்களுக்கு அத்தியவசிய சுகாதார சேவையை வழங்குதல் மற்றும் விழாக்களில் பங்கேற்ற அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் 2025 ஜூன் 06 முதல் 10 வரை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.