12 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் எச்.டி.டபிள்யூ வித்யானந்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக 2025 ஜூன் 12 ஆம் திகதி 12 வது படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.

புதிய தளபதி முகாம் வளாகத்தில் மரக்கன்று நட்டியதுடன், குழுப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர், அனைத்து நிலையினருக்கும் உரையாற்றிய தளபதி படைப்பிரிவின் எதிர்கால வளர்ச்சிக்கான தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.