பாகிஸ்தான் மனிதாபிமான உதவிக் குழு நாடு முழுவதும் நிவாரண முயற்சிகளை வலுப்படுத்துகிறது

நாடு முழுவதும் நிவாரணப் பணிகளுக்கு பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக, 47 USAR பணியாளர்களைக் கொண்ட பாகிஸ்தான் மனிதாபிமான உதவிக் குழு, பாகிஸ்தான் K-9 பிரிவைச் சேர்ந்த சிறப்புப் பயிற்சி பெற்ற இராணுவ நாய்கள் மற்றும் அதிகளவான நிவாரணப் பொருட்களுடன், C-130 விமானத்தில் 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தது.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் பாஹீம் உல் அஸீஸ் (ஓய்வு), இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், இரு நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்களுடன், குழுவினரின் வருகையில் கலந்து கொண்டது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகள் மற்றும் கூட்டுறவு உணர்வை எடுத்துக்காட்டுகின்றது.

இலங்கை இராணுவத்தின் சார்பாக சொத்து முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் என்.ஏ.எம்.பீ. நாகஹவத்த ஆர்எஸ்பீ அவர்கள் குழுவினரை வரவேற்றதுடன், பாகிஸ்தானின் உதவிக்கு இலங்கையின் பாராட்டுகளைத் தெரிவித்தார்.