3rd December 2025
இராணுவத் தலைமையகத்தின் போர் கருவி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்டிஐ மகாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பிறகு இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 03 அன்று ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:
மேஜர் ஜெனரல் எம்டிஐ மகாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் அவர்கள் 1990 ஜூலை 14 அன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாடநெறி இல 34 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1992 ஜூன் 06 இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை இராணுவ கெமுனு ஹேவா படையணியில் பணியமர்த்தப்பட்ட பின்னர், 1992 ஜூன் 20 விசேட படையணியில் நியமிக்கப்பட்டார். தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2023 ஆகஸ்ட் 19 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 டிசம்பர் 12 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தலைமையகத்தின் போர் கருவி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் விசேட படையணியின் படைத் தளபதியாக பதவி வகிக்கின்றார்.
தனது புகழ்பெற்ற சேவைக் காலத்தில், மேஜர் ஜெனரல் எம்டிஐ மகாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 1வது விசேட படையணியின் குழுத் தளபதி, 1வது விசேட படையணியின் புலனாய்வு அதிகாரி, 1வது விசேட படையணியின் 'சீ' குழுவின் இரண்டாம் கட்டளை அதிகாரி, விசேட படையணியின் 'சீ' குழுவின் அதிகாரி கட்டளை, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரி பயிலிளவல் பிரிவின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், இலங்கை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பணிநிலை அதிகாரி அதிகாரி 2 (இராணுவப் பயிற்சி), 2வது விசேட படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, சி விசேட படையணி பிரிகேட்டின் பிரிகேட் மேஜர், விசேட படையணி பயிற்சி பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர் மற்றும் 4வது விசேட படையணியின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
ஹைட்டியில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்படுத்தல் பணியின் (MINUSTAH) பணிநிலை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பயிற்சிப் பிரிவின் பயிற்சிக் குழுவின் தலைவர், இராணுவச் செயலாளர் கிளையின் பணிநிலை அதிகாரி 1 (தரம் 2/3 பிரிவு), இராணுவச் செயலாளர் கிளையின் பணிநிலை அதிகாரி 1 (விசாரணைப் பிரிவு), விஷேட படைப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி, விசேட படையணி நிலையத்தின் பிரதி நிலைய தளபதி, 144 வது காலாட் பிரிகேட் தளபதி, விசேட படையணி பிரிகேட் தளபதி, திட்ட பணிப்பகத்தின் பணிப்பாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி, 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதி, முதலாம் படையின் தளபதி, இராணுவ தலைமையக போர் கருவி பணிப்பாளர் நாயகம் மற்றும் விசேட படையணியின் படைத் தளபதி ஆகிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு வீர விக்ரம விபூஷணய, ரண விக்ரம பதக்கம், ரண சூர பதக்கம், ஆகிய மூன்று விருதுகளும், உத்தம சேவா பதக்கமும் வழங்கப்பட்டுள்ளன.
விசேட படை அடிப்படை பாடநெறி, அடிப்படை பராசூட் பயிற்சி பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, படையலகு நிர்வாக பாடநெறி, கணினி பாடநெறி மற்றும் இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி போன்ற உள்நாட்டு பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
அவர் கொமாண்டோ பாடநெறி - இந்தியா, அதிகாரிகள் உடற் பயிற்சி பாடநெறி - இந்தியா, இளம் அதிகாரிகளின் தந்திரோபாய பாடநெறி - பாகிஸ்தான், கனிஷ்ட கட்டளை பாடநெறி - இந்தியா, வன நடவடிக்கை பாடநெறி - மலேசியா, ஐக்கிய நாடுகளின் இராணுவப் பணிநிலை பயிற்சி அதிகாரிகளுக்கான பயிற்சியாளர் பாடநெறி - சீனா, ஐக்கிய நாடுகளின் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி - அவுஸ்திரேலியா மற்றும் தேசிய பாதுகாப்பு பாடநெறி - தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டு பாடநெறிகளையும் பயின்றுள்ளார்.
அவர் இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் இராஜதந்திரம் மற்றும் உலக விவகாரங்களில் டிப்ளோமா படிப்பை முடித்துள்ளார்.