அனர்த்த நிவாரண முயற்சிகளை மதிப்பிடுவதற்காக இராணுவத் தளபதி 11 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயம்

இராணுவத் தளபதி 11 வது காலாட் படைப்பிரிவிற்கு பொறுப்பான பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு, நடைபெற்று வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.

முதலில் கம்பளை ஜும்மா பள்ளிவாசலில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு நிலையத்திற்குச் சென்ற அவர், அங்கு சமீபத்திய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நிலை மற்றும் நல்வாழ்வை மதிப்பாய்வு செய்தார். அவர்களின் உடனடித் தேவைகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளை அடையாளம் காண அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

பின்னர் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள விஷேட படையணி மற்றும் ஏயார் மொபைல் பிரிகேட் படையினரால் நிறுவப்பட்ட செயற்பாட்டுத் தலைமையகத்தை இராணுவத் தளபதி ஆய்வு செய்தார்.

பேரழிவின் போது சேதமடைந்த, கம்பளையில் பணியாற்றும் ஒரு சிப்பாயின் வீட்டையிம் அவர் பார்வையிட்டார்.

அதன் பின்னர், அவர் கம்பளை-நாவலப்பிட்டி பிரதான வீதியில் தொலஸ்பாகேயில் உள்ள வேலைத் தளத்தைப் பார்வையிட்டதுடன், படையினர் அனர்த்த மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நாவலப்பிட்டியில் உள்ள பொறியியல் தளத்தை பார்வையிட்டார். நாரன்விட்ட விகாரையில் உள்ள பாதுகாப்பு நிலையத்தையும் அவர் பார்வையிட்டார்.

இந்த விஜயம் தொலுவ 111 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தை பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை மேலும் மதிப்பீடு செய்ததுடன் நிறைவடைந்தது. பின்னர், இராணுவத் தளபதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.