3rd December 2025
இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான நிவாரணப் பணிகளுக்கு நெஸ்லே ஸ்ரீலங்கா தனது ஆதரவை வழங்கியுள்ளது. 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் ரூ. 8.5 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான நெஸ்கெபே, நெஸ்டி மற்றும் நெஸ்டோமால்ட் தயாரிப்புகளை நன்கொடையாக வழங்கியது.
நெஸ்லே இலங்கையின் நிர்வாக பணிப்பாளர் திரு. பெர்ன்ஹார்ட் ஸ்டீபன் அவர்களிடமிருந்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நன்கொடையை முறையாகப் பெற்றுக்கொண்டார். நாடு முழுவதும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள படையினரின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதே இந்த நன்கொடையின் நோக்கமாகும்.
இந்த நிகழ்வை இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் ஒருங்கிணைத்து, விநியோக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை நெஸ்லேயின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.