செய்தி சிறப்பம்சங்கள்

இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் தற்போது இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் பாரிய அளவிலான புனரமைப்பு பணிகள் பிரதம கள பொறியியல் காரியாலயம் மற்றும் பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் 1 வது கள பொறியியல் படையணி மற்றும் 6 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி படையினரால் மேற்கொள்ளப்படுகின்றது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 13 அன்று மாலை எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ அறக்கட்டளைக்கு விஜயம் செய்துடன், அங்கு அவர் ஸ்ரீ போதிராஜ அறக்கட்டளையின் ஸ்தாபகர் வண. ஓமல்பே சோபித தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றார்.


இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கட்டளை அதிகாரிகள் மற்றும் தொடர்பு அதிகாரிகளுக்கான இரண்டு நாள் பயிற்சித் திட்டம் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் 2025 ஆகஸ்ட் 13 முதல் 14 வரை நடத்தப்பட்டது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், 2025 ஜூன் 14 அன்று புதிதாக நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கு மேஜர் ஜெனரல் அதிகார சின்னத்தை முறையாக வழங்கினார்.


இலங்கையில் உள்ள ஐக்கிய இராச்சிய தூதரகத்தில், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான நியமிக்கப்பட்ட புதிய பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் கீத் மைல்ஸ் அவர்கள் 2025 ஆகஸ்ட் 14 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களுடன் கம்புருப்பிட்டிய இராணுவ மாற்றுத்திறனாளி போர்வீரர்கள் பராமரிப்பு நல விடுதியான அம்பிமன்சல - II ஐ பார்வையிட்டதுடன் அங்கு வசிக்கும் போர்வீரர்களின நல்வாழ்வைப் பற்றி விசாரித்தார்.


பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் பிரதம கள பொறியியலாளர் பிரிகேடியர் சீ.டி விக்ரமநாயக்க டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் வெற்றிகரமாக நிறைவடைந்தது.


இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகம் 2025 ஆகஸ்ட் 12 அன்று இராணுவத்தில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் பிள்ளைகளான அரசு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதற்காக ஒரு சிறப்பு நன்கொடை திட்டத்தை நடத்தியது.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இலங்கை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் தொழிற்சாலைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை தடகளக் குழு 103வது தேசிய தடகள சாம்பியன்ஷிப்பை 2025 ஆகஸ்ட் 02 முதல் 03 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஏற்பாடு செய்தது.