செய்தி சிறப்பம்சங்கள்

இந்தி அறக்கட்டளையின் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைய, இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை இராணுவம் 2025 ஆகஸ்ட் 23 அன்று ருவன்வெலி சேய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி வளாகத்தில் நடைபெற்ற மத ஆசீர்வாத நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தி அறக்கட்டளையின் பிள்ளைகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியது.


உலக செபக்டக்ரா சாம்பியன்ஷிப் 2025 தாய்லாந்தின் ஹாட் யாய் நகரில் 2025 மே 18 முதல் 26 வரை நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 16 முதல் தரவரிசையில் உள்ள நாடுகள் இதில் பங்கேற்றன. இலங்கை தேசிய செபக்டக்ரா அணி திறமையை வெளிப்படுத்தி, பின்வரும் பதக்கங்களை வென்றன:


24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எச்.சீ.எல். கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஓகஸ்ட் 21 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


60 வது இலங்கை இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025 ஆகஸ்ட் 20ஆம் திகதி தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் நிறைவுற்றது.


இராணுவத் தலைமையகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட படையணி சார்ஜன் மேஜர் அதிகாரவாணையற்ற அதிகாரி I கே.ஜீ.எம். பிரியந்த ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஆகஸ்ட் 19 அன்று கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இந்தோனேசியக் குடியரசின் தூதரும் முழு அதிகாரம் பெற்றவருமான திருமதி தேவி குஸ்டினா அவர்கள் 2025 ஆகஸ்ட் 20 இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


2025 ஆகஸ்ட் 18 முதல் 20 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 2025 இராணுவ தடகள சாம்பியன்ஷிப்பில், இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் இன்று (ஆகஸ்ட் 19, 2025) கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீட்டர் மற்றும் 18 சென்டிமீட்டர் உயரம் தாண்டி புதிய இலங்கை சாதனையைப் படைத்தார்.


இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 18 அன்று இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்திற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 18, அன்று கல்குடாவில் உள்ள லாயா வேவ்ஸ் இராணுவ விடுமுறை விடுதிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 18, அன்று பெலவத்தவில் உள்ள 1 வது இராணுவ முன்னோடி படையணிக்கு அதிகாரப்பூர்வ கள விஜயத்தை மேற்கொண்டார்.