6th December 2025
இந்திய இராணுவத்தின் 73 பணியாளர்களைக் கொண்ட மருத்துவக் குழு 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்து, தொடர்ந்து தனது ஆதரவைத் வழங்கி வருகின்றது.
மஹியங்கனையில் நடைபெற்று வரும் அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, இந்திய இராணுவம் 2025 டிசம்பர் 05 ஆம் திகதி முழுமையாக செயற்படும் கள மருத்துவமனையை நிறுவியுள்ளது.
அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள காயங்கள், நோய் மற்றும் ஏனைய அவசர சுகாதாரத் தேவைகளால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மருத்துவக் குழு அத்தியாவசிய சிகிச்சையை வழங்கி வருகிறது. மருத்துவர்கள், தாதியார்கள் மற்றும் விரைவான மீட்பு வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை, வெளிநோயாளர் பராமரிப்பு, சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் அவசர சேவைகளை வழங்குகிறது.