7th December 2025
மாத்தறை ராஹூல கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், “ராஹூல சஹன சவிய” திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்கும் முகமாக 2025 டிசம்பர் 07 அன்று இராணுவ தலைமையகத்தில் ரூ. 25 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளிடமிருந்து நன்கொடையினை முறையாகப் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வை இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் ஒருங்கிணைத்தார்.