ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரதி தளபதி மேஜர் ஜெனரல் ஜே.கே.ஆர். ஜயகொடி ஆர்டப்ளியூபீ யூஎஸ்பீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பிறகு இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 12 அன்று ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:

மேஜர் ஜெனரல் ஜே.கே.ஆர். ஜயகொடி ஆர்டப்ளியூபீ யூஎஸ்பீ அவர்கள் 1991 ஜனவரி 02 அன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாடநெறி – 35ல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1992 ஆகஸ்ட் 29, இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை சிங்க படையணியில் நியமிக்கப்பட்டார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரதி தளபதி மற்றும் இலங்கை சிங்க படையணி படைத்தளபதியாக பதவி வகிக்கின்றார்.

அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும், சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் 6 வது இலங்கை சிங்க படையணி குழு தளபதி, 12 வது இலங்கை சிங்க படையணி நிறைவேற்று அதிகாரி, 6 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி, 12 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி, மின்னேரிய காலாட் பயிற்சி மைய பொதுப்பணிநிலை அதிகாரி 2, 4 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி, இலங்கை சிங்க படையணி பயிற்சி பாடசாலை பிரதம பயிற்றுவிப்பாளர், 522 வது பிரிகேடின் பிரிகேட் மேஜர், சிங்க படையணி தலைமையகத்தின் பொதுப்பணிநிலை அதிகாரி 2, பயிற்சி பணிப்பகத்தின் பொதுப்பணிநிலை அதிகாரி 2, இராணுவ தலைமையகத்தின் இராணுவ தளபதி பாதுகாப்பு பிரிவு கட்டளை அதிகாரி, 3 வது வலுவூட்டல் சிங்க படையணி பதில் கட்டளை அதிகாரி மற்றும் 26 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

மேலும் அவர் இராணுவ தலைமையகத்தின் போக்குவரத்து பணிப்பக பொதுப்பணிநிலை அதிகாரி 1, முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக பொதுப்பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), மிஹிந்து செத் மெதுர பணிநிலை அதிகாரி 1, 52 வது காலாட் படைப்பிரிவு கேணல் (பொதுப்பணிநிலை), இராணுவ தலைமையகத்தின் உபகரண பணிப்பாளர் நாயக கிளை கேணல் (உபகரண பணிப்பாளர் நாயகம்), 211 வது பிரிகேட் பதில் தளபதி,553 வது காலாட் பிரிகேட் தளபதி, இலங்கை மகளிர் படையணி தலைமையக நிலைய தளபதி, 64 வது காலாட் படைப்பிரிவு பிரதி தளபதி, 58 வது காலாட் படைப்பிரிவு தளபதி, இலங்கை சிங்க படையணி படைத்தளபதி மற்றும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரதி தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு ரண விக்ரம பதக்கம் மற்றும் உத்தம சேவா பதக்கம் என்பன வழங்கப்பட்டுள்ளன.

சிரேஷ்ட அதிகாரி படையணி சமிக்ஞை அதிகாரி பாடநெறி, பீரங்கி கண்காணிப்பாளர் பாடநெறி, ஆயுத மோதல் சட்டம் மற்றும் மனித உரிமைகள் பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, கனிஷ்ட பணிநிலை பாடநெறி, பொது தகவல் தொழில்நுட்ப திறன் பாடநெறி, சாத்தியமான மேற்பார்வையாளர்கள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்ட பயிற்றுனர்கள் பாடநெறி (இலங்கைக்கான - சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தால் நடத்தப்படுகிறது), மற்றும் பொது தகவல் தொழில்நுட்ப திறன் பாடநெறி (ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்லூரியினால் நடாத்தப்படுகிறது) ஆகிய பாடநெறிகளையும் பயின்றுள்ளார்.

மேலும் அதிகாரிகள் உடற்பயிற்சி பாடநெறி பாகிஸ்தான், பரசூட் பயிற்சி பாடநெறி பாகிஸ்தான், இளம் அதிகாரிகளின் தந்திரோபாயப் பயிற்சி – பாகிஸ்தான், கனிஷ்ட கட்டளை பயிற்சி - இந்தியா, இராணுவ தூண்டல் பயிற்சி பாடநெறி - ஹைட்டி மற்றும் சிரேஷ்ட கட்டளை பயிற்சி – இந்தியா ஆகிய பாடநெறி ஆகிய வெளிநாட்டு பாடநெறிகளையும் பயின்றுள்ளார்.

ஆங்கில டிப்ளோமா பாடநெறி (சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்லூரி பட்டதாரி பீடத்தால் நடத்தப்பட்டது), இந்தியாவின் தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட நிலை பாதுகாப்பு முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறி மற்றும் தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணையத்தால் வழங்கப்பட்ட இலங்கை கணினி இயக்க பயிற்சி மூலம் அவர் தனது தொழில்முறை தகுதிகளை மேலும் மேம்படுத்தினார்.