8th December 2025
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டீ.சீ.எம்.ஜீ.எஸ்.டீ குரே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பிறகு இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 08 அன்று ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:
மேஜர் ஜெனரல் டீ.சீ.எம்.ஜீ.எஸ்.டீ குரே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 1991 நவம்பர் 17 அன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் கொத்தலாவ பாதுகாப்பு கல்லூரி பாடநெறி – 9ல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்லூரி மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1993 நவம்பர் 22, இரண்டாம் லெப்டினன் நிலையில் கொமாண்டே படையணியில் நியமிக்கப்பட்டார்.
தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2025 ஜனவரி 18 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 டிசம்பர் 09 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகிக்கின்றார்.
அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும், சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.அவர் கொமாண்டே படையணி பயிற்சி பாடசாலையில் பயிற்றுவிப்பாளராகவும், 2 வது கொமாண்டே படையணி பிராவோ குழுவின் குழுத் தளபதியாகவும் பணியாற்றினார். அவர் 2 வது கொமாண்டே படையணியில் நெடு தூர உளவு ரோந்து குழுவின் குழுத் தளபதியாகவும், 2 வது கொமாண்டே படையணி பிராவோ குழுவின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். அவர் 2 வது கொமாண்டே படையணி பிரதி அதிகாரி, 2 வது கொமாண்டே படையணி டெல்டா குழுவின் கட்டளை அதிகாரி மற்றும் கொமாண்டே படையணியின் கடத்தல் தடுப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு குழுவின் அதிகாரி ஆகிய பதவிகளை வகித்தார். அவர் 4 வது கொமாண்டே படையணி பிரதி கட்டளை அதிகாரி, கொமாண்டே படையணி தலைமையகத்தின் பொதுப்பணிநிலை அதிகாரி 2 (செயல்பாடுகள் மற்றும் பயிற்சி), கொமாண்டே படையணி நெடு தூர உளவு ரோந்து உளவு குழு ஒருங்கிணைப்பு அதிகாரி, ஜனாதிபதி பாதுகாப்பு படை முக்கிய பிரமுகர் பிரிவின் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையகத்தின் உளவியல் செயல்பாட்டு பணிப்பகத்தின் பொது பணிநிலை அதிகாரி 1 (உளவியல் செயல்பாடுகள்) மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசின் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு உறுதிப்படுத்தல் பணியின் பணிநிலை அதிகாரி.மேலும் அவர் 61 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பொதுப்பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), இராணுவத் தலைமையகத்தின் செயல்பாட்டு பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள் பதில்), 4 வது கொமாண்டே படையணி கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையகத்தின் இராணுவத் தளபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் அமைதி காக்கும் விவகார அதிகாரி, கொமாண்டே படையணி தலைமையகத்தில் பொதுப்பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள் மற்றும் பயிற்சி) மற்றும் 3 வது கொமாண்டே படையணி கட்டளை அதிகாரி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
மேலும் அவர் அதிகாரி தொழில் மேம்பாட்டு மையத்தில் படையலகு கட்டளை பாடநெறி பிரிவின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர், அதிகாரி தொழில் மேம்பாட்டு மையத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர், 512 வது காலாட் பிரிகேட் தளபதி, இராணுவத் தலைமையகத்தில் இராணுவச் செயலாளர் கிளையின் உதவி இராணுவச் செயலாளர் 2, 112 வது காலாட் பிரிகேட் தளபதி,தேசிய பாதுகாப்பு கல்லூரி செயலாளர், இராணுவ போர் கல்லூரி தளபதி மற்றும் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு ரண விக்ரம பதக்கம், ரண சூர பதக்கம் மூன்று முறை மற்றும், உத்தம சேவா பதக்கமும் வழங்கப்பட்டுள்ளன.
சிரேஷ்ட அதிகாரி அடிப்படை கொமாண்டே பாடநெறி, மேலதீக கொமாண்டே பாடநெறி, படையலகு நிர்வாக பாடநெறி, அடிப்படை குறிபார்த்து சுடல் பாடநெறி, படையலகு பயிற்சியாளர்கள் பாடநெறி, கணனி பாடநெறி, கனிஷ்ட பணிநிலை பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, சாத்தியமான மேற்பார்வையாளர்கள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி ஆகிய பாடநெறிகளை பயின்றுள்ளார்.மேலும் இந்தியவில் கஹதக் பாடநெறி, இளம் கட்டளை அதிகாரிகள் பாடநெறி இந்தியா, அதிகாரிகள் கவச எதிர்ப்புப் பாடநெறி பாகிஸ்தான், அடிப்படை எயர்போன் பயிற்சி பாடநெறி பாகிஸ்தான், இந்தியாவில் குர்கானில் உள்ள மானேசரில் உள்ள தேசிய பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தால் நடத்தப்படும் கமாண்டோ பயிற்சி வகுப்பு மற்றும் இந்தியாவில் கனிஷ்ட கொமாண்டே பயிற்சி பாடநெறி ஆகிய வெளிநாட்டு பாட நெறிகளையும் பயின்றுள்ளார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்லூரி கலை இளங்கலை (பாதுகாப்பு ஆய்வுகள்) பட்டத்தையும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்லூரி தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலைப் பட்டத்தையும் முடித்ததன் மூலம் அவர் தனது தொழில்முறை தகுதிகளை மேலும் மேம்படுத்தினார்.