செய்தி சிறப்பம்சங்கள்

ரணவிரு சேவா அதிகாரசபையின் வேண்டுகோளுக்கு இணங்க, நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் மருத்துவ பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐந்து வாகனங்கள் இன்று (மே 20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தின் வாகன வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.


16வது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, முப்படைகளின் சேனாதிபதியான அதிமேதகு ஜனாதிபதி கௌரவ அனுர குமார திசாநாயக்க அவர்களினால் இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளின் மொத்தம் 134 அதிகாரிகளுக்கு நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


கொழும்பில் உள்ள கிராண்ட் மைட்லேண்ட் ஹோட்டலில் இன்று (மே 19) நடைபெற்ற ஒரு சம்பிரதாய நிகழ்வில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்கள் சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் 80 வது பொது கூட்டம் மற்றும் மாநாட்டை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.


ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 17 வது புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (மே 16) மாலை கங்காராமய விகாரையில் பல பிரமுகர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 15, அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.


வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர அவர்களின் தலைமையிலான இலங்கைக் குழு, 2025 மே 13 தொடக்கம் 14 வரை ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் அமைச்சர்கள் கூட்டம் 2025 இல் பங்கேற்றது.


இலங்கை கடற்படை நடாத்திய 13 வது பாதுகாப்பு சேவைகள் காற்பந்து போட்டியின் இறுதிப் போட்டி 2025 ஏப்ரல் 11 அன்று வெலிசர கடற்படை மைதானத்தில் நடைபெற்றது.


இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 14 அன்று கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் ‘பௌத்தலோக வெசாக் வலயத்தை’ சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.


இராணுவத் தளபதி தற்போது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் திருமதி பிரியங்கா விக்ரமசிங்க அவர்களுடன் இணைந்து, இராணுவத் தலைமையக வெசாக் வலயத்தை திங்கட்கிழமை (மே 12) மாலை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.


சிரச ஊடகத்தினால் 2025 மே 13 அன்று கொழும்பு 2, டாசன் வீதி சிரச வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சிரச வெசாக் வலயத்தை’ இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் திறந்து வைத்தார். கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த வெசாக் வலயம் ஏராளமான பக்தர்களை ஈர்க்கும்.