20th May 2025
16வது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, முப்படைகளின் சேனாதிபதியான அதிமேதகு ஜனாதிபதி கௌரவ அனுர குமார திசாநாயக்க அவர்களினால் இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளின் மொத்தம் 134 அதிகாரிகளுக்கு நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் பரிந்துரையின் பேரில், இராணுவத்தின் 10093 சிப்பாய்களுக்கும் நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.