செய்தி சிறப்பம்சங்கள்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஆர்) பாஹீம்-உல்-அஸீஸ், ஹிலால்-ஐ-இம்தியாஸ் (இராணுவம்), கொழும்பு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மது பாரூக் ஆகியோர் இன்று (ஏப்ரல் 08) மதியம் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.


35 வருட கால சேவையின் பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் கேஎம்என் குலசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.


கம்புருபிட்டிய அபிமன்சல - II நல விடுதியில் 2025 ஏப்ரல் 06 ம் திகதி நடைபெற்ற சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.


மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவசரகால நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக முப்படையினரின் குழுவொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2025 ஏப்ரல் 05 அன்று புறப்பட்டது.


பாதுகாப்பு சேவைகள் டென்னிஸ் போட்டி – 2025ல் பரிசு வழங்கும் விழா 2025 ஏப்ரல் 04 அன்று நாரஹேன்பிட்டி இராணுவ டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை இராணுவ டென்னிஸ் குழுவினால் முப்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களின் பங்குபற்றுதலுடன் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


புதிய விமானப்படைத் தளபதி, ஏயர் மார்ஷல் வி.பி. எதிரிசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூவீ ஆர்எஸ்பீ மற்றும் மூன்று பார்கள் யூஎஸ்பீ எப்என்டியூ (சீனா) பீஎஸ்சி கியூஎச்ஐ 2025 ஏப்ரல் 04 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


தொழிலாண்மை விருத்தி மற்றும் தலைமைத்துவ புத்தாக்க பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா 2025 ஏப்ரல் 04 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.


இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் எம் மோனிருஸ் அமான் டிஏஎஸ் என்ஜிபீ பீஎஸ்சீ பிஎன் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஏப்ரல் 03, அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


ரணவிரு வள மையத்தில் பல்வேறு தொழில்நுட்ப பாடநெறிகளை நிறைவு செய்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழிற் தகைமை நிலை 4 க்கு வெற்றிகரமாக தகுதி பெற்ற முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 30 பங்கேற்பாளர்களுக்கான இறுதி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஏப்ரல் 04 ம் திகதி வத்தளை ரணவிரு வள மையத்தில் நடைபெற்றது.


2025 மார்ச் 31, அன்று திங்கட்கிழமை பிற்பகல் பொரளை பொது மயானத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வில், பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீஎ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இணைந்து, கெமுனு ஹேவா படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் பீ.ஐ பத்திரத்ன (ஓய்வு) அவர்களுக்கு ஜயரத்ன மலர்சலையில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.