2025 ஆம் ஆண்டு புத்த ரஷ்மி வெசாக் வலயம் விருது வழங்கும் விழாவுடன் நிறைவு

ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 17 வது புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (மே 16) மாலை கங்காராமய விகாரையில் பல பிரமுகர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கௌரவ திரு. கமகேதர திசாநாயக்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ அவர்களுடன் இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் போது, முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. மதகுருமார்கள், அரச அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.