‘பௌத்தலோக வெசாக் வலயம்’ இராணுவ பதவி நிலை பிரதானியால் திறந்து வைப்பு

இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 14 அன்று கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் ‘பௌத்தலோக வெசாக் வலயத்தை’ சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் அகில இலங்கை பௌத்த பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், பல்வேறு மத மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வெசாக் கூடுகள் மற்றும் விளக்குகள் கண்காட்சி, பக்தி கீதங்கள், கலாச்சார கண்காட்சி மற்றும் பௌத்த திரைப்படப் பாடல்களின் விளக்கக்காட்சிகள் ஆகியவை சிறப்பம்சங்களாகும்.