உலக பரா தடகள சாம்பியன்ஷிப்பில் இராணுவ பரா தடகள வீரர் கோப்ரல் நுவான் இந்திக்க கமகேக்கு வெண்கல பதக்கம்

இலங்கை இராணுவத்தின் பரா தடகள வீரரான கோப்ரல் நுவான் இந்திக்க கமகே 2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற உலக பரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்த்தார்.

குறிப்பிடத்தக்க திறமை வெளிப்படுத்திய கோப்ரல் கமகே, ஆண்களுக்கான டி44 நீளம் தாண்டுதல் போட்டியில் 6.46 மீட்டர் நீளம் பாய்ந்து உலகின் சிறந்த பரா தடகள வீரர்களில் ஒருவராக இடம் பிடித்தார்.