இலங்கை இராணுவத்தினரால் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நிகழ்வுகள்

உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் விதமாக, இலங்கை இராணுவம் நாடு முழுவதும் சமூக ஈடுபாடு மற்றும் சிறுவர்களின் நலனுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக நலன்புரி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 51, 52 மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவுகளின் படையினரின் பங்கேற்புடன் பலபிரதேசங்களில் தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.

15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் கருணாலயம் சிறுவர் இல்லத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடாத்தியதுடன் இதன் போது ஒரு தமிழ் திரைப்படம் திரையிடப்பட்டதுடன், சிறுவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

அதே நேரத்தில், 9 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி அப்பகுதியில் உள்ள வறிய குடும்பங்களுக்கு 10 உலர் உணவுப் பொதிகளை வழங்கியது. 512 வது காலாட் பிரிகேடின் 17 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 14 வது கஜபா படையணி படையினர் பாலர் பாடசாலை பிள்ளைகளுக்கு தேநீர் வழங்கியதுடன் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி வலிசியாரி பாலர் பாடசாலையின் 17 பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கியது.

மேலும், 522 வது காலாட் பிரிகேட் மேற்பார்வையின் கீழ், 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி சாம்பியன் பத்து செந்த் பில்ப்ஸ் மெரிஸ் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவுடன் புத்தக நன்கொடையும் வழங்கியது. அத்துடன், 11 வது கஜபா படையணி அரோபன் சிறுவர் இல்லத்தில் பிள்ளைகளுக்கு அன்னதானம் மற்றும் பரிசுப் பொதிகளை வழங்கியது. மேலும் 553 வது காலாட் பிரிகேட் மந்தி பாலர் பாடசாலையின் 17 பிள்ளைகளுக்கு மதிய உணவை வழங்கியது.

இதேபோல்,மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம் 2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி மத்தேகொடை கமிலியா சிறுவர் இல்லத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடாத்தியது. இந்த நிகழ்ச்சியின் போது 40 சிறுவர்களுக்கு மதிய உணவு, பரிசில்கள் மற்றும் மகிழ்ச்சியைப் ஏற்படுத்தும் வகையில் மறக்கமுடியாத அனுபவத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு இசை நிகழ்ச்சியை நடாத்தியது.

இந்நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டிபீ உடுகம ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

மேலும், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 243 வது காலாட் பிரிகேட்டின் 11 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் படையினர், மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகள் மற்றும் செயற்பாடுகள் இடம்பெற்றன. இது நாள் முழுவதும் மகிழ்ச்சியான மற்றும் கொண்டாட்ட சூழ்நிலையை உருவாக்கியது. அத்தியாவசிய எழுதுபொருள் மற்றும் பாடசாலை பைகள் சிறுவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும் ஆசிரியர்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி பரிசில்கள் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் பைன் வேர்ல்டுக்கு விஜயம் மேற்கொண்டதுடன் அன்றைய நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. அங்கு சிறார்கள் பல்வேறு வேடிக்கையான செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தல்களின்படி, 21 வது காலாட் படைப்பிரிவின் மேற்பார்வையின் கீழ், 212 வது காலாட் பிரிகேட்டுடன் இணைந்து, வன்னி பிரதேசத்தில் தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.

2025 செப்டம்பர் 29 ஆம் திகதி சத்துட்ட சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 30 சிறார்களுக்கு புனித ருவன்வெளி மகா சேயாவில் வழிபட வாய்ப்பு வழங்கப்பட்டது, இது அவர்களுக்கு ஆன்மீக ரீதியாக வளப்படுத்தும் அனுபவத்தை வழங்கியது.

மேலும், கனடாவில் வசிக்கும் இலங்கையரான திரு. பிரசாத் ஜயசேகர அவர்களின் நிதியுதவியினால் அனுராதபுரம் திப்பட்டுவாகம ஆரம்ப பாடசாலையின் 47 மாணவர்களுக்கு 2025 ஒக்டோபர் 01 ஆம் திகதி பாடசாலை பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.

2025 ஆம் ஆண்டு உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, 6 வது கஜபா படையணி, மட்டக்குளியவில் உள்ள ‘மௌ செவன’ சிறுவர் இல்லத்தில், பிள்ளைகளுக்கு சுகாதாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வை நடத்தியது.

வெலிகந்த லும்பினி ஆரம்ப பாடசாலையில் 2025 ஒக்டோபர் 03 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, 201 மாணவர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கப்பட்டன, அதே நேரத்தில் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. கல்வியில் சிறந்து விளங்கியதற்காக, தரம் ஐந்தாம் புலமைப்பரிசில் தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு இரண்டு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎஸ்பிடபிள்யூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ,ஆர்எஸ்பீ,என்டியூ,பீஎஸ்சீ அவர்களுடன் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் கலந்து கொண்டார்.

இதற்கிடையில், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் 2025 ஒக்டோபர் 04 ஆம் திகதி வவுனியா அடம்பகஸ்கட தேசிய கலவன் பாடசாலையின் 47 பிள்ளைகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கினர். இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுஷானி குலதுங்க அவர்களுடன் கலந்து கொண்டார்.