பனாகொடை விஷேட காலாட் படை செயல்பாட்டு பாடநெறி எண். 78 இன் அனுபவப் பகிர்வு பட்டறையில் இராணுவ தளபதி

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 ஜனவரி 22 அன்று பனாகொடையில் உள்ள இலங்கை இலோசாயுத காலாட் படையணியில் நடைபெற்ற விஷேட காலாட் படை செயல்பாட்டு பாடநெறி எண். 78 இன் அனுபவப் பகிர்வு பட்டறையில் கலந்து கொண்டார். விஷேட காலாட் படை செயல்பாட்டு பாடநெறி வீரர்களின் சகிப்புத்தன்மை, மூலோபாய சிந்தனை மற்றும் சிறிய குழு செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, முதன்மை பணிநிலை அதிகாரிகள், இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எல்.ஐ கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.