20th January 2026
11 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் ஜே.டி சமரசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2026 ஜனவரி 20 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:
மேஜர் ஜெனரல் ஜே.டி சமரசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 1992 ஜூலை 24 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாடநெறி 38 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1994 ஏப்ரல் 09 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் கொமாண்டோ படையணியில் நியமிக்கப்பட்டார். தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2025 ஜூலை 31 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 ஜனவரி 26 ஆம் திகதி 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது, அவர் 11 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதியாக பதவி வகிக்கின்றார்.
அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும், சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். 1 வது கொமாண்டோ படையணி (சி குழு) குழு தளபதி, 1 வது கொமாண்டோ படையணி (பி குழு) குழு தளபதி, 1 வது கொமாண்டோ படையணி (ஏ குழுவின்) குழு தளபதி, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 4வது கொமாண்டோ படையணி கடத்தல் எதிர்ப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு (AH & HR) குழுவின் குழு தளபதி, 1 வது கொமாண்டோ படையணி புலனாய்வு அதிகாரி, 1 வது கொமாண்டோ படையணி (பி குழு) குழு தளபதி, கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையின் பயிற்றுவிப்பாளர், கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையின் குழு தளபதி (செயல்பாட்டு கடமைகள்), கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையின் பயிற்றுவிப்பாளர், 1 வது கொமாண்டோ படையணி அதிகாரி கட்டளை (டெல்டா குழு), கொமாண்டோ படையணி தலைமையகத்தின் பணி நிலை அதிகாரி 2 (நிர்வாகம்), 56 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பொது பணிநிலை அதிகாரி 2 (நடவடிக்கை), கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலை பயிற்சி பிரிவின் அதிகாரி கட்டளை, கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலை பாராசூட் பயிற்சி பிரிவின் அதிகாரி கட்டளை, 5 வது கொமாண்டோ படையணி செயற்பாடுகள் மற்றும் பயிற்சி அதிகாரி, முன்னால் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் ஜே ஜயசூரிய ஆர்டபிள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ (ஓய்வு) அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, 2 வது கொமாண்டோ படையணியின் இராண்டாம் கட்டளை அதிகாரி, லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் கூட்டு செயற்பாட்டு நிலையத்தின் தலைவர், கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் பொது பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்), 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்), 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), ஜெனரல் ஆர்.எம்.டி ரத்நாயக்க (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ, ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் இராணுவத் தளபதி மற்றும் ஜெனரல் ஏ.டபிள்யூ.ஜே.சீ டி சில்வா (ஓய்வு) ஆர்டபிள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, 3வது கொமாண்டோ படையணி கட்டளை அதிகாரி.
கொமாண்டோ படையணி தலைமையகம் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள் மற்றும் பயிற்சி), கொமாண்டோ படையணி தலைமையக பதில் பிரதி தளபதி, கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையின் பாராசூட் பயிற்சி பிரிவின் தலைமை பயிற்றுவிப்பாளர், இராணுவ தலைமையக நடவடிக்கை பணிப்பகத்தின் கேணல் (பொதுபணி), கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி, 583 வது காலாட் பிரிகேட் தளபதி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பிரதி தளபதி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பதில் தளபதி, இராணுவ தலைமையக நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், 11 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதியும் பதில் தளபதி ஆகிய நியமனங்களை வகித்துள்ளார்.
அவரது அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, அவருக்கு ரண சூர பதக்கம் மற்றும் உத்தமா சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட அதிகாரி பல தொழில்முறை இராணுவ பட்ட படிப்புகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார். அதில் அடிப்படை கொமாண்டோ பாடநெறி, முன்னேற்ற கொமாண்டோ பாடநெறி, படையலகு உதவி ஆயுத அதிகாரிகள் பாடநெறி, அலகு புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பாடநெறி, ஸ்கை டைவிங் பாடநெறி, ஆயுத பயிற்சி சட்ட பாடநெறி, ஜம் மாஸ்டர் பயிற்சி பாடநெறி, கனிஷ்ட பணியாளர் பாடநெறி, உளவியல் செயல்பாட்டு பயிற்சி பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, சாத்தியமான பார்வையாளர்கள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி, தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி போன்றன ஆகும்.
மேலும் அவர், இந்தியா தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட நிலை பாதுகாப்பு முகாமைத்துவ டிப்ளோமா, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.