இராணுவத்தினால் மனித வள முகாமைத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு

இலங்கை இராணுவ மறுசீரமைப்பு செயல்முறைக்கு இணங்க, நவீன மனித வள முகாமைத்துவ நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2026 ஜனவரி 07 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், பதவி நிலைப் பிரதானி அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் பணியாளர் கடமைகள் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பயிற்சி, நிறுவனப் புரிதலை வலுப்படுத்துதல் மற்றும் சமகால மனித வள முகாமைத்துவம் கொள்கைகளை திறம்பட பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. பட்டய முகாமைத்துவ பணியாளர் நிறுவனத்தின் திரு. சுரேன் பெரேரா அவர்களினால் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் 95 அதிகாரிகள் மற்றும் 90 சிப்பாய்கள் என மொத்தம் 185 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.