செய்தி சிறப்பம்சங்கள்

11 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் ஜே.டி சமரசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2026 ஜனவரி 20 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


நேபாள இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியைச் சேர்ந்த தூதுக்குழு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2026 ஜனவரி 19 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தது.


யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும், பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள், 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2026 ஜனவரி 13 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இலங்கை இராணுவ மறுசீரமைப்பு செயல்முறைக்கு இணங்க, நவீன மனித வள முகாமைத்துவ நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2026 ஜனவரி 07 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் நடாத்தப்பட்டது.


அண்மையில் நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.எல்.ஐ. கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ மற்றும் மேஜர் ஜெனரல் கே.பீ.பீ. கருணாநாயக்க ஆகியோர், 2026 ஜனவரி 05, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.


இலங்கை சிங்க படையணியின் மறைந்த பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கான இராணுவத்தின் இறுதி மரியாதை 2026 ஜனவரி 04 ஆம் திகதி களனி, சேபால பொது மயானத்தில் நடைபெற்றது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை இராணுவ பௌத்த சங்கத்தினால் பனாகொட ஸ்ரீ போதிராஜாராமய விகாரையில் 2026 ஜனவரி 03 அன்று துருத்து பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சமய நிகழ்வில் கலந்து கொண்டார்.


இலங்கை சிங்க படையணியின் மறைந்த பிரிகேடியர் பிரிகேடியர் ஐ.எச்.எஸ்.விஜேசேன (ஓய்வு) அவர்களுக்கான இராணுவத்தின் இறுதி மரியாதை 2026 ஜனவரி 02 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.


இலங்கை இராணுவம் 2025 டிசம்பர் 31 ஆம் திகதி இராணுவ தலைமையக பல்லூடக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை இராணுவ ஒழுக்க விதிகளின் மின்னணு பதிப்பை அறிமுகப்படுத்தியது. அனைத்து அணிகளிலும் நிறுவன ஒருமைப்பாடு, நெறிமுறை ஒழுக்கம் மற்றும் தொழில்முறை பொறுப்புணர்வை வலுப்படுத்துவதற்கான இராணுவத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக உள் விவகார பிரிவால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இராணுவத் தலைமையகத்தின் ஆராய்ச்சி கருத்து மற்றும் கோட்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் எ.எம்.சீ.பீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 30 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.