30th December 2025
இராணுவத் தலைமையகத்தின் ஆராய்ச்சி கருத்து மற்றும் கோட்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் எ.எம்.சீ.பீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 30 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:
மேஜர் ஜெனரல் எ.எம்.சீ.பீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 1990 செப்டெம்பர் 07 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி 02 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியிலும் தியதலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியிலும் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த அவர் 1991 மார்ச் 13 இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் நியமிக்கப்பட்டார்.
தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2024 டிசம்பர் 27 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 ஜனவரி 02 ஆம் திகதி 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது, அவர் இராணுவத் தலைமையகத்தின் ஆராய்ச்சி கருத்து மற்றும் கோட்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமான பதவி வகித்தார்.
அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி குழு தளபதி, 1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதிகாரி கட்டளை, 1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி நிறைவேற்று அதிகாரி,1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதிகாரி கட்டளை, இராணுவ தலைமையக ஊடக பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2, 1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி பதில் இரண்டாம் கட்டளை அதிகாரி, 1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதிகாரி கட்டளை, இலங்கை இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை கல்லூரி பணிநிலை அதிகாரி 2 (பயிற்சி மற்றும் ஆதரவு), ஹைட்டி ஐக்கிய நாட்டு அமைதிகாக்கும் பணியில் (மினுஸ்டா) இலங்கை குழுவின் அதிகாரி கட்டளை, 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி, 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி, ஹைட்டி ஐக்கிய நாட்டு அமைதிகாக்கும் பணியின் இராணுவப் பணியாளர் அதிகாரி யூ-1 பதில் பதவிநிலை, இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம்), ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்,
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் (பொது பணி), இராணுவ தலைமையக பொது பணிநிலை பிரிவின் கேணல் (பொது பணி), 622 வது காலாட் பிரிகேட் பதில் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வு பிரதி அலுவலகத்தின் சிரேஷ்ட பணிநிலை அதிகாரி, 221 வது காலாட் பிரிகேட் தளபதி, இராணுவ தலைமையக காணி மற்றும் விடுதி பராமரிப்பு பணிப்பகத்தின் பிரிகேடியர் (ஒருங்கிணைப்பு) முப்படை காணி (வடக்கு மற்றும் கிழக்கு), 54 வது காலாட் படைப் பிரிவின் தளபதி, இராணுவத் தலைமையகத்தின் ஆராய்ச்சி கருத்து மற்றும் கோட்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுகின்றார்.
அவரது அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, அவருக்கு ரண விக்ரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் (03 முறை) வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட அதிகாரி பல தொழில்முறை இராணுவ பட்ட படிப்புகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார். இதில் படையலகு ஆதரவு ஆயுத புதுப்பிப்பு பாடநெறி, பயிற்றுவிப்பு முறைகள் பாடநெறி மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி ஆகியவை அடங்கும்.
அவர் பல வெளிநாட்டு பாடநெறிகளையும் பயின்றார். அவற்றில் இந்தியா இளம் அதிகாரிகள் பாடநெறி, இந்தியா படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, பாகிஸ்தான் இடைக்கால தொழில் கற்றல் மற்றும் இந்தியா அடிப்படை பராசூட் பாடநெறி போன்றவையாகும்.
மேலும் இராணுவத் பாடநெறிகளுக்கு மேலதிகமாக சிரேஷ்ட அதிகாரி களனி பல்கலைக்கழக பாதுகாப்புப் பாடநெறி முதுகலைப் பட்டத்தையும், அமெரிக்கா கலிபோர்னியா மொன்டேரி கடற்படை முதுகலை பாடசாலையில் பாதுகாப்புப் பாடநெறி (சிவில்-இராணுவ உறவுகள்) முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.