சிவில் பணிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள இரணைப்பளை மைதானத்தில், 59வது காலாட் படைப்பிரிவினரால் 2025 செப்டம்பர் 10ஆம் திகதி கால்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.


122 வது காலாட் பிரிகேட், 12 வது கஜபா படையணி மற்றும் 3 வது இலங்கை தேசிய பாதுகாலர் படையணி ஆகியவற்றின் படையினர் 2025 செப்டெம்பர் 11 ஆம் திகதி டபள் ட்ரீ பை ஹில்டன் வீரவில ராஜவர்ண விடுதியில் நடைபெற்ற இரத்த தானம் நிகழ்வின் போது தானாக முன்வந்து இரத்த தானம் வழங்கினர்.


இராணுவத் தளபதியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இலங்கை இராணுவம் வன்னி பிரதேசத்தில் உள்ள கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு மனிதாபிமான முயற்சியை 2025 செப்டம்பர் 05 ஆம் திகதி தொடங்கியது.


சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக, 'ராண்டியா' நீர் சுத்திகரிப்பு திட்டம் 2025 மே 30ஆம் திகதி நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கோஹோம்பன் குளம் கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய சுத்திகரிப்பு நிலையம் 2025 ஆகஸ்ட் 26ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


"தூய இலங்கை" திட்டத்திற்கு இணையாக, வைல்ட் டஸ்கர்ஸ் அமைப்புடன் இணைந்து, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 212 வது காலாட் பிரிகேட் பிரதேசத்திலுள்ள கலாவெவ குளத்தில் யானைகளின் வாழ்க்கை முறைக்கு தடையாக இருக்கும் படர்ந்துள்ள தாவர இனங்களை அகற்றுவதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


மாத்தறையில் மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வாக, துடாவயில் தற்போதுள்ள நில்வலா ஆற்றின் தடையை ஒட்டி தற்காலிக தடையை அமைக்கும் பணியை இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ளது.


கல்லாறு தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வலைப்பந்து மைதானம் 2025 ஆகஸ்ட் 27 ஆம் திகதி திறக்கப்பட்டது. இது அப்பிரதேசத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டை மேம்படுத்தும்.


22 வது காலாட் படைப்பிரிவின் மேற்பார்வையின் கீழ், திருகோணமலையில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு 2 வது தொ) கஜபா படையணியினால் ஒரு புதிய வீடு கட்டப்பட்டது.


2025 ஆகஸ்ட் 20 முதல் 22 வரை நல்லூர் கந்தசாமி கோவில் வளாகத்தில், 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் ப்யூர் டேல் சிலோன் லிமிடெட் மற்றும் ரிச்லைப் டெய்ரி லிமிடெட் ஆகியவற்றின் ஆதரவுடன், பக்தர்களிடையே 51,000 பால் தேநீர் கோப்பைகளை வழங்கினர்.


மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினர், வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பண்டாரவளை ஸ்ரீ மலியதேய வித்தியாலயத்தில் 2025 ஆகஸ்ட் 22 ஆம் திகதி பாடசாலை உபகரணம் வழங்கும் திட்டத்தை நடத்தினர்.