இராணுவத்தினரால் சுற்றுலாதுறை தொடர்பான செயலமர்வு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 573 வது காலாட் பிரிகேடின் ஏற்பாட்டில் பூஸ்ஸ இலங்கை இலேசாயுத காலாட் காலாட் படையணி விருந்து மண்டபத்தில் 2025 ஒக்டோபர் 29 அன்று சுற்றுலாதுறை தொடர்பான செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் அவசரகால பதிலளிப்பில் கவனம் செலுத்தி, இலங்கை இராணுவத்திற்கும் காலி மாவட்டத்தில் உள்ள 63 சுற்றுலாதுறை சார் பங்குதாரர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.

லெப்டினன் கேணல் டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ பண்டார யூஎஸ்பீ பீஎஸ்சீ தலைமையிலான 1 வது கொமாண்டோ படையணி எ குழுவினர், அவசரகால தயார்நிலை, உள்நாட்டு அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு மற்றும் சுற்றுலாதுறை சார் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு திட்டமிடல் தொடர்பான விரிவுரைகள் மற்றும் நடைமுறை செயல்விளக்கங்களை வழங்கினர்.