12th November 2025
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீபீபீ குலதிலக என்டிசீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 7 வது கெமுனு ஹேவா படையணியினரால் 100 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு 233 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எஸ்ஜேஎமஎன்எஸ் பெரேரா யூஎஸ்பீ அவர்களின் நெருக்கமான மேற்பார்வையிலும் 7 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.டபிள்யூ.எம்.கே ரத்நாயக்க யூஎஸ்பீ எல்எல்எம்சீ அவர்களின் தலைமையில் 2025 நவம்பர் 08, அன்று காவத்தமுனை ABU உணவகம் மற்றும் விருந்து மண்டபத்தில் நடைப்பெற்றது.
நிகழ்வின் போது விநியோகிக்கப்பட்ட உலர் உணவு பொதிகள் மற்றும் ஆடைகள் திரு. ரஞ்சன் என்டோனியோ மற்றும் ரோட்டரி கழக உறுப்பினர்களின் நிதியுதவில் வழங்கப்பட்டது.