சிவில் பணிகள்

21 வது காலாட் படைப்பிரிவு படையினர், 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணி மற்றும் 5 வது (தொ) கஜபா படையணி படையினர் 2025 ஜனவரி 10 ஆம் திகதி திவுல்வெவ குளக்கட்டின் பகுதியளவு சேதமடைந்த பகுதியை வெற்றிகரமாக சரிசெய்தனர். இந்த சேதம் சுற்றியுள்ள சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியிருந்தது.


12 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.ஏ.கே குணரத்ன யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பாடசாலை உபகரணங்கள் நன்கொடை வழங்கும் நிகழ்வு 2025 ஜனவரி 4, அன்று ஹம்பாந்தோட்டை கிரிந்தகம ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.


கெமுனு ஹேவா படையணி படையினர் கஹெங்கம பிரதேசத்தினருடன் இணைந்து, 2025 ஜனவரி 04, அன்று கஹெங்கம பகுதியில் 2000 மீட்டருக்கும் அதிகமான சாலையை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.


பூமலாந்தன் ஆரம்ப பாடசாலையில் பூமலாந்தன் ஆரம்ப பாடசாலை மற்றும் மது சிங்கள மகா வித்யாலயத்தைச் சேர்ந்த 94 மாணவர்களுக்கு 542 வது காலாட் பிரிகேட்டினரால் 2025 ஜனவரி 7 அன்று அத்தியாவசிய கற்றல் உபகரணம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.


23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 7 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி அகியவற்றின் கட்டளை...


231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்ஜிஏ மலந்தெனிய ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 12 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் தலைமையில் 12 வது கெமுனு ஹேவா படையணி...


2025 ஜனவரி 3 ம் திகதி பொல்கஹவெல புனித பெர்னாடெட்ஸ் மாதிரிப் பாடசாலையில் நடைபெற்ற மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டு நிகழ்வில் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பாடசாலை அதிபரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 10 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் ஒருங்கிணைப்புடன், 04 ஜனவரி 2025 அன்று மருதங்கேனி கலாசார மையத்தில் பாடசாலை உதவி பொருட்கள் வழங்கும் நன்கொடை நிகழ்வு இடம்பெற்றது.


7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி மற்றும் 5 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினர், 2024 டிசம்பர் 28 அன்று குளியாப்பிட்டிய, கிரிந்தாவ்வில் சிரேஷ்ட அதிகாராவாணையற்ற அதிகாரிக்கான புதிய வீட்டை நிர்மாணித்தனர்.


வெலிகந்த பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக மகுல்பொகுண குளம் நிரம்பி வழிந்ததை தொடர்ந்து மகுல்பொகுண மற்றும் கலிங்கவிலவை இணைக்கும் வீதி பாரியளவில் சேதமடைந்திருந்தது. இந்த அனர்த்தத்திற்கு பதிலளிக்கும் வகையில், 23 வது காலாட் படைப்பிரிவினர், 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினருடன் இணைந்து 2025 ஜனவரி 02 ம் திகதி விரைவான புனரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.