27th October 2025
பிரான்சில் வசிக்கும் இலங்கையரான திரு. இனோஷன் சுரன், ஜெர்மனி, துருக்கி மற்றும் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளை உள்ளடக்கிய பாரிஸிலிருந்து யாழ்ப்பாணம் வரை 10,000 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை நிறைவுசெய்தார். 2025 செப்டம்பர் 1 அன்று தனது பயணத்தைத் ஆரம்பித்த அவர் 2025 ஒக்டோபர் 23 அன்று யாழ்ப்பாணத்தை வெற்றிகரமாக வந்தடைந்தார்.
யாழ்ப்பாணத்தின் கலாசார பாரம்பரியம், சுற்றுலா, நல்லிணக்கம் மற்றும் கலாசார புரிதலை மேம்படுத்துவதையும், ஒற்றுமை மற்றும் அமைதியை வலியுறுத்துவதையும் அவரது பயணம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், காங்கேசன்துறை தல்செவன இராணுவ விடுதியில் திரு. இனோஷன் சுரன் அவர்களை 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம். ரிஸ்வி ராசிக் ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அன்புடன் வரவேற்றார். 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் அவரது விதிவிலக்கான அர்ப்பணிப்பு, சகிப்புத்தன்மை மற்றும் தேசபக்தி உணர்வை கௌரவிக்கும் வகையில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.