இராணுவத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் எழுதுபொருட்கள் விநியோகம்

கிழக்கு பாதுகாப்புப் படையினரால் திம்புலாகல நிதன்வல ஆரம்ப பாடசாலை மற்றும் தம்மின்ன மகா வித்தியாலய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி 2025 நவம்பர் 07 ஆம் திகதி நிதன்வல ஆரம்ப பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த திட்டத்தின் போது நூறு பிள்ளைகள் பயனடைந்தனர்.

இந்த திட்டத்திற்கு CEVA லொஜிஸ்டிக் லங்கா (தனியார்) நிறுவனம் நிதியுதவி வழங்கியது. CEVA லொஜிஸ்டிக் லங்கா (தனியார்) நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. ரணில் பொலோனோவிட்ட, சிரேஷ்ட அதிகாரிகள், நிறுவன உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.