மஹா ஓயா கல்வி வலயத்தின் கீழ் செயல்படும் அம்/ மஹா உனுவத்துர புபுல வித்தியாலய மாணவர்களுக்காக, பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் பாடசாலைப் பொருட்களை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டம் 2026 ஜனவரி 17 அன்று பாடசாலை வளாகத்தில் நடத்தப்பட்டது.
சிவில் பணிகள்
“தூய நகரம் - ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கமைய, 2026 ஜனவரி 07 முதல் 09 வரை 56 வது காலாட் படைப்பிரிவு பிரதேசத்தில், சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் வழிகாட்டுதல் மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினரால் எழுதுபொருட்கள் விநியோகம்
2026-01-12
அண்மையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டம் 2026 ஜனவரி 09 ஆம் திகதி நடாத்தப்பட்டது. கடுவெல ரனால மாதிரி ஆரம்ப பாடாசலையின் அனைத்து மாணவர்களுக்கும் 425 பாடசாலை பைகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டன.
அனுராதபுரம், அசோக கனிஷ்ட பாடசாலை மற்றும் சியம்பலாகஸ்வெவ பாலர் பாடசாலை மாணவர்களின் நலனுக்காக, தந்திரிமலை அசோக கனிஷ்ட பாடசாலையில் 2026 ஜனவரி 04 ஆம் திகதி பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
எட்டம்பகஸ்கட ஏழைக் குடும்பங்களுக்கு, எட்டம்பகஸ்கட ஸ்ரீ சுதர்மராம விஹாரையில் 2026 ஜனவரி 03 ஆம் திகதி இராணுவத்தினர் உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை நடாத்தினர்.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தை தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உலர் உணவுப் பொருட்கள் விநியோகத் திட்டம் நடாத்தப்பட்டது.
இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் விநியோகம்
2026-01-06
2026 ஆம் புதிய ஆண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கும் திட்டம் இராணுவத்தினரால் 2026 ஜனவரி 03 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினரால் கற்றல் உபகரணங்கள் விநியோகம்
2026-01-05
காரைநகர் பிரதேசத்திலுள்ள 11 பாடசாலைகளைச் சேர்ந்த 120 மாணவர்களுக்கு 2026 ஜனவரி 04 ஆம் திகதி காரைநகர் கலாசார மண்டபத்தில் இராணுவத்தினரால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கும் திட்டம் நடாத்தப்பட்டது.
2026 ஜனவரி 03 ஆம் திகதி திம்புலாகலை மனம்பிட்டியவில் உள்ள மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் மனம்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் பிள்ளைகளுக்கான பாடசாலை எழுதுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
51வது காலாட் படைப்பிரிவு சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் மற்றும் மனிதாபிமான விழுமியங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 2025 டிசம்பர் 25, அன்று கோப்பாய் இருபாலையிலுள்ள அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் சிறப்பு நத்தார் தான நிகழ்ச்சியை நடத்தியது.