இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் விநியோகம்

2026 ஆம் புதிய ஆண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கும் திட்டம் இராணுவத்தினரால் 2026 ஜனவரி 03 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் நெஷனல் வங்கியின் (HNB) நிதியுதவி மூலம் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் போது, சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.

லுணுகம்வெஹெர பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த 496 மாணவர்கள் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். மேலும், 122 வது காலாட் பிரிகேடில் பணியாற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பீ.கே.எல். அமரசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, ஹட்டன் நஷனல் வங்கியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் திரு. மனோஜித் வீரசூரிய, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.