இராணுவத்தினரால் முதியோர் இல்லத்தில் நத்தார் கொண்டாட்டம்

51வது காலாட் படைப்பிரிவு சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் மற்றும் மனிதாபிமான விழுமியங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 2025 டிசம்பர் 25, அன்று கோப்பாய் இருபாலையிலுள்ள அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் சிறப்பு நத்தார் தான நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது மதிய உணவு வழங்கப்பட்டதுடன், இல்லத்தில் வசிக்கும் 40 முதியவர்களுக்கு அத்தியாவசிய சுகாதாரப் பொருட்களும் வழங்கப்பட்டன. மேலும், 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் முதியோர் இல்ல வளாகத்தை சுத்தம் செய்து, அவர்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்த பங்களித்தனர்.

இந்த நிகழ்ச்சி 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஆர். ராசிக் ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.