8th January 2026
எட்டம்பகஸ்கட ஏழைக் குடும்பங்களுக்கு, எட்டம்பகஸ்கட ஸ்ரீ சுதர்மராம விஹாரையில் 2026 ஜனவரி 03 ஆம் திகதி இராணுவத்தினர் உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை நடாத்தினர்.
கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே அவர்களினால் நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களுடன், 56 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழுள்ள 8 வது கெமுனு ஹேவா படையணியினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.யு.ஏ. சோலங்கராச்சி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கிராமவாசிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.