19th January 2026
மஹா ஓயா கல்வி வலயத்தின் கீழ் செயல்படும் அம்/ மஹா உனுவத்துர புபுல வித்தியாலய மாணவர்களுக்காக, பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் பாடசாலைப் பொருட்களை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டம் 2026 ஜனவரி 17 அன்று பாடசாலை வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டம், ஆரம்ப வகுப்புகள் முதல் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
24 வது காலாட் படைப்பிரிவின் மேற்பார்வையின் கீழ், 243 வது காலாட் பிரிகேட் மற்றும் 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி இணைந்து பாடசாலை புத்தகங்கள் மற்றும் உதவி பொருட்களை வழங்கும் விழாவை ஏற்பாடு செய்தன.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதியும், இலங்கை பீரங்கி படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்பீஎஸ்சி, கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கான நிதியுதவியை 'தரன அறக்கட்டளை' வழங்கியது. தரன அறக்கட்டளையின் தலைவர், அதிகாரிகள் குழுவுடன் இணைந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். நிகழ்ச்சித்திட்டத்தின் போது, உனுவத்துர புபுல வித்தியாலயத்தின் தேவையுடைய மாணவர்களுக்கு அத்தியாவசிய பாடசாலை புத்தகங்கள் மற்றும் பாடசாலை உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 243 வது காலாட் பிரிகேட் தளபதி, 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.