இராணுவ சிறப்பம்சம்
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புதிய படைத் தளபதி கடமைகளை பொறுப்பேற்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் ஒக்டோபர் 8 ஆம் திகதி பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிய பிரதம களப் பொறியியலாளர் கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் டீ சி பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 18 வது பிரதம களப் பொறியியலாளராக 09 ஒக்டோம்பர் 2024 அன்று இராணுவ தலைமையகத்தில் பதவியேற்றார்.
12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி சித்தாண்டி எரளக்குளத்தில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு வீடு ஒன்றை நிர்மாணித்தனர்.
2024 ஈகிள்ஸ் மொன்சூன் கிண்ணப் போட்டியில் இலங்கை இராணுவத்தினர் வெற்றி

இலங்கை விமான படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கோல்ப் போட்டியான டி ஈகிள்ஸ் மொன்சூன் கிண்ணப் போட்டி, 2024 செப்டெம்பர் 28 மற்றும் 29 திகதிகளில் திருகோணமலை ஈகிள் கோல்ப் மைதானத்தில் நடைப்பெற்றது.
56 வது காலாட் படைப்பிரிவினரால் காக்கயன்குளத்தில் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குகண்ணாடிகள்

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்,12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியினரால் 02 ஒக்டோபர் 2024 அன்று காக்கயன்குளம் சன சமுக நிலையத்தில் மூக்குகண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கை பீரங்கிப் படையணியின் கேணல் டி.எம்.பி.பீ.பி திஸாநாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ காலமானார்

இலங்கை பீரங்கிப் படையணியின் கேணல் டி.எம்.பி.பீ.பி திஸாநாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் திங்கட்கிழமை (07) காலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
2 வது இயந்திரவியல் காலாட் படையணியினால் வவுனியாவில் தகுதியான குடும்பத்திற்கு வீடு

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2 வது இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர் 2024 செப்டம்பர் 27 அன்று வவுனியா, பூரவசம்குளம், நீலியமோட்டையில் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே. வணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் தகுதியான குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
போர் பயிற்சி பாடசாலையின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் எல்.எச்.எம்.ராஜபக்ஷ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையின் புதிய தளபதியாக 02 ஒக்டோபர் 2024 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
6 வது இலங்கை பீரங்கி மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிறுவர் தின கொண்டாட்டம்

2024 ஒக்டோபர் 01 ஆம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.ஆர்.டி.எஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 6 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் நிட்டம்புவ விஹார மகாதேவி பாலர் பாடசாலையின் 40 பிள்ளைகளுக்கும், சியம்பலாபே இசுரு சிறுவர் இல்லத்தின் 24 பிள்ளைகளுக்கும் மதிய உணவை ஏற்பாடு செய்திருந்ததுடன், பொருட்களும் வழங்கப்பட்டன.
13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியில் கயிறு இழுத்தலில் இலங்கை இராணுவம் வெற்றி

2024 செப்டெம்பர் 27 அன்று பூனேவ இலங்கை கடற்படை தளத்தில் நடைபெற்ற 13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியில் கயிறு இழுத்தல் போட்டியில் இலங்கை இராணுவம் சம்பியன்ஷிப்பை வென்றது.