புதிய பிரதம களப் பொறியியலாளர் கடமை பொறுப்பேற்பு
9th October 2024
மேஜர் ஜெனரல் டீ சி பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 18 வது பிரதம களப் பொறியியலாளராக 09 ஒக்டோம்பர் 2024 அன்று இராணுவ தலைமையகத்தில் பதவியேற்றார்.
புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், பிரதம களப் பொறியியலாளர் அவர்கள் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
விழாவில் இலங்கை பொறியியலாளர் படையணியின் கழக உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.